இஸ்ரேலின் விமான நிலையத்தை தாக்கிய ஏவுகணை!

யெமன் ராணுவத்தால் சற்றுமுன் ஏவப்பட்ட பாரிய ஏவுகணை ஒன்று இஸ்ரேலின் பென்குரியன் விமான நிலையத்தைத் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹூதிஸ்ட் படையால் ஏவப்பட்ட இந்த பாலிஸ்டிக் ஏவுகணையை இடைமறிக்கத் தவறியதை இஸ்ரேலிய ராணுவம் ஒப்புக்கொண்டுள்ளது.
எமனில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணையை இடைமறிக்க பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக இராணுவம் கூறுகிறது.
இஸ்ரேலிய விமானப்படையின் வான் பாதுகாப்பு வரிசை இந்த தோல்வி குறித்து விசாரணை முடிக்கிவிடப்பட்டுள்ளது.