யாழ்.ஊடக மன்றம் எனும் அமைப்பு அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது

யாழ்ப்பாண ஊடகவியலாளர்களால் யாழ்.ஊடக மன்றம் எனும் அமைப்பு இன்றைய தினம்(19.06.2020) அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

டில்கோ தனியார் விடுதியில் இடம்பெற்ற அங்குரார்ப்பண நிகழ்வில் ஊடக மன்றத்திற்கான இலட்சினையை மதத் தலைவர்கள் ஊடகவியலாளர்கள் ஒன்றிணைந்து நாடாவை வெட்டி அங்குரார்பணம் செய்து வைத்தனர்.

நிகழ்விலே சர்வமதத்தலைவர்கள் யாழ்ப்பாண பல்கலைக்கழக அரசியல் துறை பேராசிரியர் கணேசலிங்கம், யாழ் பல்கலைக்கழக கிறிஸ்தவ துறை விரிவுரையாளர் அருட்தந்தை இ.இரவிச்சந்திரன் அடிகளார் ஊடகவியலாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் தமிழ்பேசும் மக்களின் நோக்கு நிலையில் இருந்து எதிர்வரும் தேர்தல் எனும் தலைப்பில் யாழ்ப்பாண பல்கலைக்கழக அரசியல் அறிவியல் துறை பேராசிரியர் கணேசலிங்கம் உரை நிகழ்த்தினார்.

இதன்போது அரசியலும் ஊடகமும் ஒன்றாக இணைந்து செயற்பட வேண்டிய தேவை தற்போது எழுந்துள்ளதாகவும் அதற்கு ஊடகவியலாளர்கள் பங்களிப்பு செய்ய வேண்டும் எனவும் ஊடகத்துறையில் தற்போது நிலவுகின்ற சவால்கள் தொடர்பிலும் தனது கருத்துக்களை வெளியிட்டார்.

Comments are closed.