12 நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவிற்குள் நுழைய தடை.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 12 நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவிற்குள் நுழைவதைத் தடைசெய்யும் நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
“வெளிநாட்டு பயங்கரவாதிகள்” மற்றும் பிற பாதுகாப்பு அச்சுறுத்தல்களிலிருந்து பாதுகாப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
இந்தத் தடையால் பாதிக்கப்பட்ட நாடுகள் ஆப்கானிஸ்தான், மியான்மர், சாட், காங்கோ, எக்குவடோரியல் கினியா, எரித்திரியா, ஹைட்டி, ஈரான், லிபியா, சோமாலியா, சூடான் மற்றும் ஏமன்.
புருண்டி, கியூபா, லாவோஸ், சியரா லியோன், டோகோ, துர்க்மெனிஸ்தான் மற்றும் வெனிசுலா ஆகிய ஏழு நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு நுழைவு ஓரளவு தடைசெய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
