யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் இம்முறை 5 லட்சத்து 71 ஆயிரத்து 848 பேர் வாக்களிக்க தகுதி

யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் இம்முறை 5 லட்சத்து 71 ஆயிரத்து 848 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக தெரிவித்த மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் அமல்ராஜ் மக்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி வாக்களிக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

யாழ் மாவட்ட செயலகத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமல்ராஜ் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்…

யாழ் தேர்தல் மாவட்டத்தை பொறுத்தவரையில் கடந்த வருடம் 5 லட்சத்து 64 ஆயிரத்து 714 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர்.

இந்நிலையில் இம்முறை 5 லட்சத்து 71 ஆயிரத்து 848 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர் வாக்காளர்களுக்கான வாக்காளர் அடையாள அட்டைகள் எமக்கு கிடைக்கப் பெற்று உள்ளன அவை தபால் திணைக்களத்தின் ஊடாக வாக்காளர்களுக்கு விநியோகிக்கப்பட உள்ளன.

வாக்காளர்கள் சுகாதார முறைகளைப் பின்பற்றி அழைப்பினை மேற்கொள்ள முடியும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் ஒரு வீட்டிற்கு தேர்தல் வாக்கு கேட்டுப் செல்லும் போது சுகாதார முறைகளை பின்பற்றவேண்டியது கட்டாயமானது எனவும் தெரிவித்தார்.

Comments are closed.