கம்பஹாவில் ஒருவர் சுட்டுப் படுகொலை!

கம்பஹா மாவட்டம், கந்தானையில் இன்று இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கந்தானை பொதுச் சந்தைக்கு அருகில், காரில் இருந்த ஆண்கள் இருவரை இலக்கு வைத்து இன்று காலை இந்தத் துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளது என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்தச் சம்பவத்தில் படுகாயமடைந்த இருவரும் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அதில் ஒருவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார் என்றும் பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

மேலும், இந்தச் சம்பவத்தில் படுகாயமடைந்த மற்றைய நபர் மறைந்த முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் பிரத்தியேகச் செயலாளராகப் பணியாற்றிய சமீரா மனஹார என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.