மோ.சைக்கிளுடன் மோதியது லொறி! வயோதிபர் ஒருவர் பரிதாப மரணம்!!
மோட்டார் சைக்கிளுடன் லொறி மோதிய விபத்தில் வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளர்.
இந்தச் சம்பவம் கொழும்பு – கல்கிஸை பிரதேசத்தில் நேற்று இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.
மொரட்டுவையில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த லொறி, மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிளின் செலுத்துநர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
கல்கிஸை பிரதேசத்தைச் சேர்ந்த 75 வயதுடைய வயோதிபரே உயிரிழந்தவர் ஆவார்.
இந்த விபத்து தொடர்பில் கல்கிஸைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
