ஐ.பி.எல். வெளியேற்றுதல் சுற்றில் ஐதராபாத் பெங்களூரு அணிகள் இன்று மோதல்.

ஐ.பி.எல். வெளியேற்றுதல் சுற்றில் (எலிமினேட்டர்) ஐதராபாத்-பெங்களூரு அணிகள் இன்று மோதுகின்றன.

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் அபுதாபியில் இன்று நடக்கும் வெளியேற்றுதல் சுற்றில் புள்ளி பட்டியலில் 3-வது மற்றும் 4-வது இடம் பிடித்த அணிகளான முன்னாள் சாம்பியன் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணி, பெங்களூரு ரோயல் சேலஞ்சர்சை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டிக்கான 2-வது தகுதி சுற்றில் விளையாடும். தோற்கும் அணி போட்டியை விட்டு வெளியேறும்.

இதுவரை ஐ.பி.எல். கோப்பையை வெல்லாத பெங்களூரு அணி அந்த தாகத்தை தணிப்பதற்கான முதற்படிக்கட்டு இந்த ஆட்டமாகும். பெரிய ஸ்கோரை எட்டுவதற்கு கப்டன் விராட் கோலி (460 ரன்), டிவில்லியர்ஸ் (398 ரன்), தேவ்தத்படிக்கல் (472 ரன்) ஆகிய பேட்ஸ்மேன்களில் ஒருவர் நிலைத்து நின்று ஆட வேண்டியது அவசியமாகும்.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

ஐதராபாத்: வார்னர் (கேப்டன்), விருத்திமான் சஹா, மனிஷ் பாண்டே, வில்லியம்சன், பிரியம் கார்க், ஜாசன் ஹோல்டர், அப்துல் சமாத், ரஷித்கான், ஷபாஸ் நதீம், சந்தீப் ஷர்மா, டி.நடராஜன்.

பெங்களூரு: ஜோஷ் பிலிப் அல்லது ஆரோன் பிஞ்ச், தேவ்தத் படிக்கல், விராட் கோலி (கேப்டன்), டிவில்லியர்ஸ், கிறிஸ் மோரிஸ், ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சாஹல், முகமது சிராஜ், ஷபாஸ் அகமது அல்லது நவ்தீப் சைனி, உதனா.

இலங்கை நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

Leave A Reply

Your email address will not be published.