ஜிம்பாப்வே அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் அணி.

ஜிம்பாப்வே அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் போட்டி மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

3 ஒருநாள் போட்டிகளில் 2-1 என்ற கணக்கில் பாகிஸ்தான் அணி தொடரை வென்றது.

இதையடுத்து, இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி ராவல்பிண்டியில் இன்று நடைபெற்றது. நாணய சுழற்சியில் வென்ற ஜிம்பாப்வே அணியின் கப்டன் ஷமு முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தார்.

அதன்படி ஜிம்பாப்வே அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் ஷமு, பிரண்டன் டெய்லர் களமிறங்கினர். 2 பந்துகளை சந்தித்த கப்டன் ஷமு ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறினார்.

அடுத்துவந்த வில்லியம்ஸ் 25 ரன்னில் வெளியேறினார். டெய்லரும் 20 ரன்னில் வெளியேறினார். மற்ற வீரர்கள் தடுமாறியபோதும் நிலைத்து நின்று ஆடிய மட்ஹிவிரி 48 பந்துகளில் 70 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

இதனால், 20 ஓவர் முடிவில் ஜிம்பாப்வே அணி 6 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் அணியின் ஹரிஸ் அவ்ஃ, ரியாஸ் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதையடுத்து,  157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணியின் பகர் சமான் மற்றும் கப்டன் பாபர் அசம் களமிறங்கினர். 19 ரன்னுடன் சமான் வெளியேறினார்.

அடுத்து வந்த ஹைதர் அலி 7 ரன்னில் அவுட் ஆனார். பின்னர் வந்த முகமது ஹபீஸ் உடன் ஜோடி சேர்ந்த அசம் நிலைத்து நின்று ஆடினார். 32 பந்துகளில் 36 ரன்கள் குவித்த நிலையில் முகமது ஹபீஸ் வெளியேறினார். 55 பந்துகளில் 82 ரன்களை குவித்து அசம் வெளியேறினார்

இறுதியில், 18.5 ஓவரில் 4 விக்கெட் இழந்த பாகிஸ்தான் அணி வெற்றி இலக்கான 157 ரன்களை எட்டியது. இதன் மூலம் ஜிம்பாப்வே அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது.

Leave A Reply

Your email address will not be published.