கால்நடைகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்ற பெண் ஒருவர் யானை தாக்கி பரிதாப உயிரிழப்பு!

காட்டு யானை தாக்கியதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை மாலை அம்பாந்தோட்டை – பூந்தல வனப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

மேற்படி பெண் காட்டு யானை தாக்கியதில் படுகாயமடைந்து அம்பாந்தோட்டை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அம்பாந்தோட்டை, வெலிஹட்ட சந்தி பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய பெண்ணே உயிரிழந்துள்ளார்.

அவர் தனது கால்நடைகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்றபோது காட்டு யானை தாக்கியுள்ளது என்று ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சடலம் அம்பாந்தோட்டை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அம்பாந்தோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.