கொழும்பில் உள்ள அனைத்து சிறைச்சாலைகளையும் தனிமைப்படுத்த முடிவு

கொழும்பு சிறைகளில் கோவிட் -19 வைரஸால் பாதிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் கைதிகளை அடையாளம் காண வேண்டியுள்ளமையால் வெலிக்கடை உட்பட கொழும்பில் உள்ள அனைத்து சிறைச்சாலைகளையும் தனிமைப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலை சுகாதார சேவைகள் துணை இயக்குநர் ஹேமந்த ரணசிங்க தெரிவித்தார்.

அதன்படி, வெலிக்கடை, மெகசின் மற்றும் கொழும்பு ரிமாண்ட் ஆகிய மூன்று சிறைகளும் தனிமைப்படுத்தப்படும் என்றார்.

சிறைச்சாலைகள் தனிமைப்படுத்தப்பட்ட பின்னர் 14 நாட்களுக்கு யாரும் உள்ளே செல்லவோ அல்லது வெளியேறவோ அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

தனிமைப்படுத்தப்படுவதற்கு முன்னர், அந்த சிறைகளுக்கு தேவையான எண்ணிக்கையிலான அதிகாரிகளை பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

வெலிக்கடை மற்றும் கொழும்பு சிறைச்சாலைகளில் நேற்று ஒரு அதிகாரி மற்றும் 16 கைதிகள் உட்பட 17 பேர் கோவிட் பாதிக்கப்பட்டவர்களாக அடையாளம் காணப்பட்டனர், சிறைகளில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கையை 162 பேராகும், இதில் 07 அதிகாரிகள், 90 பெண் கைதிகள் மற்றும் 65 ஆண் கைதிகள் உள்ளனர். சிறை சுகாதார சேவைகளின் துணை இயக்குநர் இத் தகவலை தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.