Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு அமெரிக்காவில் வசிக்கும் இலங்கையர்களினால் நிதி நன்கொடை.
டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான அரசின் ‘Rebuilding Sri Lanka’ நிதியத்துக்கு அமெரிக்காவின் சென் பிரான்சிஸ்கோவில் வசிக்கும் இலங்கையர்கள் 10 இலட்சம் ரூபா நிதி நன்கொடை அளித்தனர்.
அமெரிக்காவின் சென் பிரான்சிஸ்கோவில் வசிக்கும் இலங்கையர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி பாலித ராஜபக்ஷ, நேற்றுமுன்தினம் ஜனாதிபதி மக்கள் தொடர்பு பணிப்பாளர் நாயகம் தர்மசிறி கமகேவிடம் இதற்கான காசோலையை ஒப்படைத்தார்.
