குருநகரில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட கட்டடங்களை அகற்றியது மாநகர சபை.

குருநகரில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட
கட்டடங்களை அகற்றியது யாழ்.மாநகர சபை.

யாழ்ப்பாணம் மாநகர சபைக்குட்பட்ட குருநகர் பகுதியில் வடிகால்களுக்கு மேலாக சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த வீடு மற்றும் கடைகள் யாழ்ப்பாண நகர சபையால் அகற்றப்பட்டன.

ஜனாதிபதி செயலகத்தின் பரிந்துரைக்கு அமைய யாழ்ப்பாணம் பொலிஸாரின் பாதுகாப்புடன் இன்று குருநகர் பகுதியில் மாநகர சபையின் ஆளுகைக்குட்பட்ட வடிகாலுக்கு மேலாக சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட வீடுகள் மற்றும் கடைத் தொகுதிகளே இடிக்கப்பட்டுள்ளன.

யாழ். மாநகர சபை கட்டளைச் சட்டத்தின் கீழ் குறித்த கட்டடங்கள் அனுமதியின்றி வடிகால்களுக்கு மேல் நீண்ட காலத்துக்கு முன்னர் அமைக்கப்பட்டிருந்தன. எனினும், கடந்த வருடத்திலிருந்து இதனை அப்புறப்படுத்துமாறு உரிமையாளர்களிடம் கோரிக்கை விடுத்தும் அப்புறப்படுத்தப்படாத நிலையில் நேற்று ஜனாதிபதி செயலகத்தின் அறிவுறுத்தலின்படி குறித்த கட்டடங்கள் யாழ். மாநகர சபையால் அகற்றப்பட்டுள்ளன.

மாநகர சபையால் பலவந்தமாக அகற்றப்பட்டமை தொடர்பில் அப்பகுதி மக்கள் தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்கள்.

“கட்டடத்தை இடிப்பது தொடர்பில் எமக்கு முன்கூட்டியே அறிவுறுத்தல் வழங்கப்படவில்லை. இது அராஜகமான செயல்” என்று அப்பகுதி மக்கள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளார்கள்.

Leave A Reply

Your email address will not be published.