மன்னார் மாவட்ட புதிய அரச அதிபராக நந்தினி ஸ்ரான்லி டி மெல் நியமனம்!

மன்னார் மாவட்ட புதிய அரச அதிபராக
நந்தினி ஸ்ரான்லி டி மெல் நியமனம்!

மன்னார் மாவட்ட புதிய அரசாங்க அதிபராக திருமதி. நந்தினி ஸ்ரான்லி டி மெல் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் எதிர்வரும் 16 ஆம் திகதி திங்கட்கிழமை தனது கடமையைப் பொறுப்பேற்கவுள்ளார்.

1989இல் பட்டதாரி ஆசிரியராக இணைந்த நந்தினி, 1995இல் இலங்கை நிர்வாக சேவைக்குத் தெரிவு செய்யப்பட்டார்.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

இவர் மன்னார் கமநல சேவை திணைக்கள உதவி ஆணையாளராகவும், மன்னார் பிரதேச செயலாளராகவும், மன்னார் மாவட்ட மேலதிக அரச அதிபராகவும், தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் மேலதிக செயலாளராகவும், வடக்கு மாகாண சபையின் பிரதி பிரதம செயலாளராகவும் கடமையாற்றியுள்ளார்.

அத்துடன் போர்ச் சூழ்நிலையான கால கட்டத்திலும், திடீர் அனர்த்த பாதிப்புக்கள் மத்தியிலும் பாதிக்கப்பட்ட மக்களுக்காகக் களத்தில் நின்று சேவையாற்றியுள்ளார்.

நீண்ட காலத்துக்குப் பின்னர் மீண்டும் மன்னார் மாவட்ட மக்களுக்காகப் பணி செய்யக்கூடிய ஒருவர் அரச அதிபராக நியமிக்கப்பட்டுள்ளமை குறித்து அம்மாவட்ட மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.