திடீர் சுகயீனத்தால் பிள்ளையான் சிறைச்சாலை வைத்தியசாலையில்…

பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்), திடீர் சுகயீனம் காரணமாக சிறைச்சாலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்தத் தகவலை சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார்.

சுகயீனம் காரணமாக நேற்று பிற்பகல் அவர் சிறைச்சாலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார் எனவும், தற்போது அவர் அங்குள்ள மருத்துவர்களின் விசேட கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருகின்றார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் இடம்பெற்ற பல்வேறு சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில் இவர் கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.