புலமை பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வௌியீடு

2020 ஆண்டுக்கான தரம் 5 புலமை பரிசில் பரிட்சை பெறுபேறுகள் சற்று முன்னர் வெளியாகியுள்ளன.

பரீட்சை திணைக்களத்தின் www.doenets.lk அல்லது www.results.exams.gov.lk என்ற இணையத்தள முகவரிகளில் குறித்த பெறுபேறுகளை பார்வையிட முடியும் என பரீட்சை திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

புலமைப் பரிசில் பரீட்சை வெட்டுப்புள்ளிகளும் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.

162 – கொழும்பு, களுத்துறை, கம்பஹா, கண்டி, மாத்தளை, காலி, மாத்தறை, குருநாகல், கேகாலை

160 – யாழ்ப்பாணம் , கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, மட்டக்களப்பு, அம்பாறை, ஹம்பாந்தோட்டை

159 – திருகோணமலை, பதுளை, பொலனறுவை

158 – நுவரெலியா, மன்னார், இரத்தினபுரி, அநுராதபுரம்

155 – புத்தளம், மொனராகலை

Leave A Reply

Your email address will not be published.