95% செயல்திறனைக்கொண்ட கொரோனா தடுப்பூசி!!

கொரோனாவிலிருந்து பாதுகாக்கும் ஒரு புதிய தடுப்பூசி கிட்டத்தட்ட 95% பயனுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளதாக அமெரிக்க நிறுவனமான மாடர்னாவின் முதற்கட்ட தரவுகள் தெரிவித்துள்ளது.

இன்று வெளியிடப்பட்ட இடைக்கால பகுப்பாய்வு மற்றும் உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா நோய்த் தொற்றுகள் கொண்ட 95 நோயாளிகளின் அடிப்படையிலான ஓர் அறிக்கையின் படி, குறித்த தடுப்பூசி 94.5% செயல்திறனைக் கொண்டுள்ளது என்பது கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் இது எதிர்வரும் வாரங்களில் அவசரகால பயன்பாட்டு அங்கீகாரத்திற்காக அமெரிக்க கட்டுப்பாட்டாளரான உணவு மற்றும் மருந்து நிர்வாகத்திற்கு விண்ணப்பிக்க திட்டமிட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலதிக விபரங்கள் :
http://ceylonmirror.net/english/2004.html

Leave A Reply

Your email address will not be published.