இமாசல பிரதேசம்: கார் விபத்தில் 8 பேர் பரிதாப பலி!

சிம்லா

இமாசல பிரதேசத்தில் சம்பா மாவட்டத்தில் பனி அடர்ந்த பயிர்கார்ஹ்-சாக் பகுதியில், கார் ஒன்று சென்றுள்ளது. நேற்று முன்தினம் இரவில் அந்த கார் விபத்தில் சிக்கியது.

ஆனால், நேற்று மதிய அளவிலேயே விபத்து பற்றி உள்ளூர்வாசிகளுக்கு விவரம் தெரிந்துள்ளது. உடனடியாக அவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து, மீட்பு பணி மேற்கொள்ளப்பட்டது.

எனினும், இந்த விபத்தில் சிக்கி 8 பேர் பலியாகி உள்ளனர் என தகவல் தெரிவிக்கின்றது. அந்த பகுதியில் மீட்பு பணி நடந்து வருகிறது என பா.ஜ.க. எம்.எல்.ஏ. ஹன்ஸ் ராஜ் கூறினார். எனினும், ஆழ்ந்த சரிவு மற்றும் மோசமடைந்த வானிலை ஆகியவற்றால் மீட்பு பணி பாதிக்கப்பட்டு உள்ளது. அதனால், உடலை மீட்கும் பணிகள் இன்று காலை தொடரும் என்று கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.