டெல்லியில் பெரும் சதி முறியடிப்பு: தாக்குதலுக்கு திட்டமிட்ட 9 பாகிஸ்தான் ஐஎஸ்ஐ பயங்கரவாதிகள் கைது!
டெல்லி,
தலைநகர் டெல்லியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாகவும், தலைநகரில் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் டெல்லி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தகவலின் அடிப்படையில் போலீசார் தீவிர சோதனை நடத்தினர். இந்த சோதனையில் டெல்லியில் பதுங்கி இருந்த 9 பயங்கரவாதிகளை போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட 9 பயங்கரவாதிகளும், பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ உடன் தொடர்பில் இருந்ததும், டெல்லியில் பல்வேறு இடங்களில் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததும் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட பயங்கரவாதிகளிடமிருந்து ஆயுதங்கள், வெடிபொருட்களை பறிமுதல் செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
