இரண்டு மாத காலத்தில் ஆகக்குறைந்தது 30 பிசிஆர் பரிசோதனைக்கு முகம்கொடுத்தேன்.

இரண்டு மாத காலத்தில் ஆகக்குறைந்தது 30 பிசிஆர் பரிசோதனைகளுக்கு முகங்கொடுத்தாக இலங்கை கிரிக்கட் வீரர் இசுறு உதான தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் கிரிக்கட் போட்டிகளில் பங்கேற்ற ஒரே இலங்கை வீரரான இசுறு உதான வீராட் கோலி தலைமையிலான பெங்களூர் ரோயல் சலெஞ்சர்ஸ் அணிக்காக விளையாடியிருந்தார்.

ஐக்கிய அரபு இராச்சியத்தின் துபாய் அபுதாபி மற்றும் ஷார்ஜா மைதானங்களில் நடைபெற்ற போட்டிகளின் போது ஐபிஎல் இல் பங்கேற்ற வீரர்கள் மிகவும் பாதுகாப்புமிக்க உயிர் குமிழி ( bio-bubble ) என்ற பொறிமுறையில் வழிநடத்தப்பட்டனர். செப்டம்பர் மாதம் முதல் நவம்பர் 10ம் திகதிவரை ஐபிஎல் நடைபெற்ற காலப்பகுதியில் ஆகக்குறைந்தபட்சம் தாம் 30 தடவைகள் பிசிஆர் பரிசோதனைகளுக்கு உட்பட்டதாக இசுறு உதான சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை இலங்கையில் கொரோனா தொற்றாளர்களை அடையாளம் காண்பதற்காக மேற்கொள்ளப்படும் பிசிஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கை போதாது என்ற குற்றச்சாட்டுக்கள் தொடர்ந்தும் முன்வைக்கப்படுகின்றன.

இலங்கையில் நேற்று நவம்பர் 15ம் திகதிவரை மொத்தமாக பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஒக்டோபர் 6ம்திகதிக்கு பின்னரே இலங்கையில் ஒரே நாளில் 4,000 அதிகமான பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ள ஆரம்பித்திருந்தனர். கடந்த சில வாரங்களாக சராசரியாக நாளொன்றுக்கு 10,000 வரையான பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது .

கொழும்பு மாநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இன்று இதுவரையான காலப்பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளாகிய 109 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது.

மாநகர எல்லையில் நேற்று (15) ஆயிரம் PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக கொழும்பு மாநகர சபையின் தொற்றுநோயியல் நிபுணர் தினுகா குருகே தெரிவித்துள்ளார்.

இதில் 400 பரிசோதனைகளின் முடிவுகள் கிடைத்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இதற்கிணங்க, கொரோனா தொற்றுக்குள்ளாகிய 109 பேர் ப்ளூமெண்டல் மற்றும் அளுத்மாவத்தை பகுதிகளை சேர்ந்தவர்கள் என கொழும்பு மாநகர சபையின் தொற்றுநோயியல் நிபுணர் தினுகா குருகே தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.