ரணில், ரவிக்கு அழைப்பாணை – கொழும்பு மாவட்ட நீதிமன்றம்

ஐக்கிய தேசிய கட்சியிலுள்ள 99 அங்கத்தவர்களின் கட்சி அங்கத்துவத்தை இடைநிறுத்த அக்கட்சியின் செயற்குழு, எடுத்துள்ள தீர்மானத்தை நடைமுறைப்படுத்தப்படுவதை தடுக்கும் இடைக்கால உத்தரவை பிறப்பிப்பதனை கொழும்பு மாவட்ட நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

இதேவேளை கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க, உப தலைவர் ரவி கருணாநாயக்க ஆகியோருக்கு அழைப்பாணை நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தான் உட்பட 99 கட்சி அங்கத்தவர்களின் உறுப்புரிமை நீக்கப்பட்டுள்ளதாக முன்னாள் பா.உ ரஞ்சித் மத்தும பண்டார தனது முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கான தீர்ப்பை வழங்கிய கொழும்பு மாவட்ட நீதிபதி அமாலி ரணவீர இதுபோன்ற தடையுத்தரவை கோறும் போது முறைப்பாட்டாளர் உரிமையை அதே விதமாக நீதிமன்றத்தில் தெளிவுப்படுத்த வேண்டுமென குறிப்பிட்டார்.

எனினும் முறைப்பாட்டாளர் சம்பவங்களை மூடிமறைத்து தடையுத்தரவை கோரியிருப்பதாக குறிப்பிட்டார்.

இதன் அடிப்படையில் இத்தடையுத்தரவு பிறப்பிக்கப்படுவதை நிராகரிப்பதாக நீதிபதி குறிப்பிட்டார்.

வழக்கு ஜீலை 27ம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுமென நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

நேற்றைய தினம் முதல் இரு வாரங்களுக்குள் ஆட்சேபனைகள் இருந்தால் சமர்ப்பிக்க முடியுமென முறைப்பாட்டாளர்களாக குறிப்பிட்டுள்ள கட்சியின் பொதுச்செயலாளர் முன்னாள் பா.உ அகில விராஜ் காரியவசமிற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments are closed.