சீன உற்பத்தி பொருட்களை நிராகரிக்க இந்திய வர்த்தக சங்கம் நடவடிக்கை

இந்தியாவில் சீன உற்பத்திகளை நிராகரிக்க அகில இந்திய வர்த்தக சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அண்மையில் ஏற்பட்ட இந்திய சீன நெருக்கடி தொடர்பில் அவர்கள் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

சீன உற்பத்திகளை எரித்து சகல சீன உற்பத்திகளையும் புறக்கணிக்குமாறு இந்திய வர்த்தக சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

70 மில்லியன் வர்த்தகர்கள் மற்றும் 40 ஆயிரம் வர்த்தக சங்க பிரதிநிதிகள் அரசாங்கம் வழங்கியுள்ள சகல ஒப்பந்தங்களையும் இரத்து செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளது.

சீனா இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய வர்த்தக பங்காளியாக இருந்த போதிலும் இந்திய வர்த்தக சங்கம் அரசாங்கத்திடம் இக்கோரிக்கையை விடுத்துள்ளது.

சகல உற்பத்திகளிலும், உற்பத்தி செய்யப்படும் நாடு கட்டாயம் குறிப்பிடுவதை சட்டமாக்க வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்துள்ளது.

Comments are closed.