ரஷ்யத் தமிழறிஞர் அலெக்சாண்டர் டுபியான்ஸ்கி மறைந்தார்

ரஷ்யத் தமிழறிஞர் அலெக்சாண்டர் டுபியான்ஸ்கி நேற்று காலை மாஸ்கோவில் மறைந்தார்.

கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் சிகிச்சை பெற்று வந்த இவர் தனது 79வது வயதில் உயிரிழந்துள்ளார்.

தமிழ் மொழியை சரளமாக பேசக்கூடிய நல்ல அறிஞரை தமிழறிவுலகம் இழந்து விட்டது.

அதன்படி கடந்த ஆண்டு இடம்பெற்ற ஐரோப்பியத் தமிழ் ஆய்வியல் மாநாட்டில் கலந்து கொண்டு ரஷ்யன் – தமிழ் அகராதிகள் பற்றி கட்டுரை படித்திருந்தார். 2016 இல், இரண்டாவது மாநாடு – திருக்குறள் மாநாட்டில் கலந்து கொண்ட போது அன்னாருக்கு ஜி. யூ. போப் விருது வழங்கிப் கௌரவிக்கப்பட்டார்.

தொல்காப்பியம் சம்ஸ்கிருத அடிப்படை கொண்டதல்ல எனத் தெளிவாக எடுத்துரைத்த அயல்நாட்டுத் தமிழ் அறிஞர் என்ற பெருமை இவரையே சாரும்.

மேலும் இது மிக துயரமான ஒரு சம்பவம். தமிழுக்கு! தமிழ் மக்களுக்கு !வேதமாக இருந்த ஒரு மூத்த அறிஞரை இழந்துவிட்டோம் .

Leave A Reply

Your email address will not be published.