தென் மண்டல மாநில முதல்வர்கள் குழுவின்துணைத்தலைவராக தமிழ்நாடு முதல்வர் விஜய் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தென் மாநில முதல்வர்கள் மாநாடு
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் நாளை சென்னை கோவளத்தில் தென் மாநில முதலமைச்சர்கள் மாநாடு நடைபெற உள்ளது.

இதில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார், கேரள முதல்வர் வி.டி.சதீசன், தெலங்கானா முதல்வர் ஏ.ரேவந்த் ரெட்டி, ஆந்திர முதல்வர் என்.சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமிக்கு பதிலாக புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் கலந்து கொள்கிறார்.

இந்த மாநாட்டில் ஒவ்​வொரு மாநிலங்​களுக்கு இடையே​யான ஒத்​துழைப்​பு, பொருளா​தார வளர்ச்​சி, தொழில் முதலீடு​கள், கூட்​டுறவைப் பலப்​படுத்​து​வது, நீர்​வளப் பகிர்​வு, குற்​றங்​கள் தடுப்​பு, எல்​லைப் பிரச்சி​னை​கள் உள்ளிட்ட பல்​வேறு முக்​கிய விவ​காரங்​கள் குறித்து ஆலோ​சனை நடத்​தப்பட உள்​ளது.

இந்த மாநாட்டில் கலந்து கொள்ள உள்துறை அமைச்சர் அமித்ஷா, இன்று மாலை 6 மணிக்கு தனி விமானம் மூலம் சென்னை வருகிறார்.

நாளை காலை 10 மணிக்கு தொடங்கி 3 மணி வரை இந்த மாநாடு நடைபெற உள்ளது. மாலை 3.30 மணி அளவில் மாமல்லபுரம் கடற்கரை கோயிலில் மத்திய அமைச்சர் அமித் ஷா வழிபாடு செய்துவிட்டு டெல்லிக்கு திரும்புகிறார்.

துணைத்தலைவராக முதலமைச்சர் விஜய்
காவேரி மற்றும் மேகதாது விவகாரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த முதல்வர் விஜய் கர்நாடகா செல்ல இருந்த நிலையில், போராட்டம் காரணமாக கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் கேட்டுக்கொண்டதன் பேரில் அந்த பயணத்தை முதல்வர் ரத்து செய்தார்.

தற்போது கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் சென்னை வரும் நிலையில், இரு மாநில முதல்வர்களும் தனிப்பட்ட முறையில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவார்கள் எனவும், கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டது குறித்தும் முதல்வர் விஜய் பேசுவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த தெற்கு மண்டல குழுவிற்கான தலைவராக உள்துறை அமைச்சர் அமித்ஷாவும், துணைத்தலைவராக முதல்வர் விஜய்யும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.