கொரோனா தொற்று ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சார நிகழ்வு.

கொவிட் ஒரு கொடிய நோயாகும். இந்த கொடிய நோயிலிருந்து மக்களை காப்பாற்ற வேண்டியதும், அதேவேளை மக்களுக்கு எப்போது உதவி தேவைப்படுகின்றதோ, அச்சந்தர்ப்பத்தில் அதை செய்வது காலத்தின் தேவையாகும்.

ஆனால் தனியார் நிறுவனங்கள் கொரோனா தொற்று கட்டுப்படுத்தும் நடவடிக்கைளிலும் மனிதாபிமான நடவடிக்கைளில் ஈடுபடுவதிலும் மிகக் குறைந்தளவில் கவனம் செலுத்தி வருகின்றது.

அரசாங்கம் அந்நிறுவனங்களுக்கு  ஆதரவு வழங்கி கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளைப் பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கைள் எடுக்க வேண்டும்.

மனித அபிவிருத்தி தாபன நிறைவேற்று பணிப்பாளர் கலாநிதி. பி.பி.சிவப்பிரகாசம்  தெரிவித்தார்.
கொரோனா தொற்று ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சார நிகழ்வில் கலந்துக்கொண்டபோது மனித அபிவிருத்தி தாபன நிறைவேற்று பணிப்பாளர் கலாநிதி. பி.பி.சிவப்பிரகாசம்  இவ்வாறு இதனைத் தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில்
மனித அபிவிருத்தி தாபனம் கடந்த ஏப்ரல் மாதம் முதல் இவ்வாறான விழிப்புணர்வு நடவடிக்கைகளை பல அரசாங்க நிறுவனங்களின் அனுசரனையுடனும், ஆலோசனையுடனும் கண்டி மாவட்டம், நுவரெலியா மாவட்டம், கேகாலை மாவட்டம், அம்பாறை மாவட்டம் போன்ற மாவட்டங்களில் செய்துவருகின்றது.

இம்மாவட்டங்களில் கொவிட் – 19  பாதிப்பும், அதிலிருந்து எவ்வாறு மீள்வது தொடர்பாகவும் விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றது.
கொவிட் முதலாம் அலையின்போது பல்வேறு நிறுவனங்களும் விழிப்புணர்வு, பாதுகாப்பு கவசங்கள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்தல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுப்பட்டு வருகின்றன.

ஆனால் கொவிட் இரண்டாம் அலை ஆரம்பமாகியது என குறிப்பிடப்பட்ட கடந்த ஒக்டோபர் மாதம் முதல் பெரும்பாலான நிறுவனங்கள் மௌனம் காத்துவருவது குறிப்பிடத்தக்கது. இதேவேளை மாவட்ட அடிப்படையிலான பரந்தளவிலான விழிப்புணர்வு நடவடிக்கைகளை மனித அபிவிருத்தி தாபனமே மேற்கொண்டுவருகின்றது.
இம்மாதம் முதலாம் திகதி நுவரெலியா மாவட்டத்தில் அட்டன், நோர்வூட், மஸ்கெலியா, போகவந்தலாவ, நல்லத்தண்ணி, விதுலிபுர, வட்டவளை, லக்சபான, கினிகத்தேன போன்ற பொலிஸ் நிலையங்களுடன் இணைந்து, பொலிஸ் அத்தியட்சக வழிகாட்டலில் மற்றும் பிரதேச செயலகம், பிராந்திய சுகாதார பணிப்பாளர் காரியாலயம் என்பவற்றின் அனுசரணையுடன் மனித அபிவிருத்தி தாபனம் பெருந்தோட்ட கிராமிய, நகர் பிரதேசங்களில் கொவிட் ஒழிப்பு விழிப்புணர்வு நடவடிக்கைகளுக்கான ஏற்பாடுகளை செய்துவந்தது.

அதேவேளை பெருந்தோட்ட மனித அபிவிருத்தி நிதியத்தின் பிராந்திய நிலையத்தினூடாக கிட்டத்தட்ட  60 தோட்டங்களுக்கு கொவிட் சம்பந்தமான விழிப்புணர்வு ஊட்டல் சுவரொட்டிகள், கையேடுகளையும் வழங்கியுள்ளது.

கண்டி மாவட்டத்தில் பல்வேறு பொலிஸ் நிலையங்கள், பிரதேச செயலகங்கள், பிரதேச சுகாதா காரியாலயங்கள் மற்றும் சில சிவில் அமைப்புகளுடன் இணைந்து கொவிட் நோயிலிருந்து பாதுகாத்தல் சம்பந்தமாக விழிப்புணர்வு பிரச்சாரத்தை கடந்த மூன்று வாரங்களாக கிராமப்புறங்கள், தோட்டப்புறங்கள், கண்டி உட்பட பிரதான நகரங்கள் என்பவற்றில் ஏற்பாடு செய்துவருகின்றது.

இவ்வார இறுதியில் மனித அபிவிருத்தி தாபனத்துடன் கம்பளை, தொழுவ பிரதேச செயலகம், கண்டி மாவட்ட சுகாதாரசேவை பணிப்பாளர் காரியாலயம், கம்பளை, தொழுவ சுகாதார அதிகாரி காரியாலயம், பேராதனை, கம்பளை, புப்புரஸ்ஸ, கலஹா பொலிஸ் நிலையங்கள், தொழுவ இராணுவ முகாமும் இணைந்து, கம்பளை, தொழுவ பிரதேச செயலகப்பகுதியில் கிட்டத்தட்ட 33 கிராமங்களில் விழிப்புணர்வு பிரச்சார நடவடிக்கை மேற்கொண்டுவருகின்றது.

இதேவேளை அம்பாறை மாவட்டத்தில் காரைதீவு, நிந்தவூர் போன்ற பிரதேசங்களில் பிரதேச செயலகங்கள், பொலிஸ் நிலையங்கள் பிரதேச சுகாதார பணிமனை மற்றும் சிவில் அமைப்புகளுடன் இணைந்து விழிப்புணர்வு நடவடிக்கைகளை மீனவர்கள், விவசாயிகள், வர்த்தகர்கள், பாடசாலை மாணவர்க்ள, அரச உத்தியோகஸ்த்தர்கள் போன்ற பல்வேறு மட்டத்தினர் மத்தியில் கொவிட் 19 சம்பந்தமான விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றது.

மேலும் சம்மாந்துரை, சாய்ந்தமருது, கல்முனை போன்ற பிரதேசங்களிலும் இவ்விழிப்புணர்வு வேலைத்திட்டம் மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இக்பால் அலி

Leave A Reply

Your email address will not be published.