பொலீஸசாரால் கொரோனா விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுப்பு.

ஆட்டோசாரதிகளுக்கு கொரோனா விழிப்புணர்வு நடவடிக்கைகள் பொலீஸசாரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் கொரோனா தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தி மக்களை பாதுகாப்பாக இருக்க வழிவகுக்கும் வகையில் முச்சக்கர வண்டிகளுக்கு சமூக இடைவெளியினை பேணும் வகையிலான ஸ்டிக்கர்கள் புதுக்குடியிருப்பு பொலீஸசாரால் இன்று(01) காலை ஒட்டப்பட்டுள்ளன.

பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் வீதிபோக்குரவத்து பொலீசார் குறித்த பிரதேசத்தில் உள்ள சுமார் 150 முச்சக்கர வண்டிகளுக்கு சமூக இடைவெளியினை பேணி கொரோனா தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்க கோரி ” மீட்டரான வாழ்கை” எனும் தொனிப்பொருளில் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

நாள்தோறும் வாடிக்கையாளர்களின் போக்குவரத்து நடவடிக்கைகளில் ஈடுபடும் முச்சக்கர வண்டிகளின் உரிமையாளர்களுக்கான சுகாதார அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதுடன் எப்போதும் சமூக இடைவெளிகளை பேணும் வகையிலான ஸ்டிக்கர்கள் முச்சக்கர வண்டிகளில் ஒட்டப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

Leave A Reply

Your email address will not be published.