ஆணாக மாறிய பிரபல நடிகை “இனி என்னை அவன் என்றே அழைக்கலாம்”

திருநங்கைகள் பலரும் நடிகைகள், காஸ்ட்யூம் டிசைனர், ஹேர் ஸ்டைலிஸ்ட், மேக்கப் வுமன் என பல்வேறு அவதாரங்களையும் எடுத்து முன்னணி நட்சத்திரங்களாக ஜொலித்து வருகின்றனர். இந்நிலையில் பிரபல நடிகை ஒருவர் ஆப்ரேஷன் செய்து ஆணாக மாறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்செப்ஷன், ஜூனோ உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் எலன் பேஜ்.

ஜூனா படத்தில் நடித்ததற்காக ஆஸ்கர் விருது வரை அவருடைய பெயர் பரிந்துரைக்கப்பட்டது. தற்போது மூன்றாம் பாலினமாக மாறியுள்ள எலன் பேஜ் அதுகுறித்து தன்னுடைய சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார். நான் மூன்றாம் பாலினத்தவர் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறேன். இனி என்னை அவன் என்றே அழைக்கலாம். இனி என் பெயர் எலியட். என் வாழ்க்கையில் இந்த இடத்திற்கு வர நான் அதிர்ஷ்டசாலியாக உணர்கிறேன்.


இந்த பயணத்தில் எனக்கு ஆதரவாக இருக்கும் மக்களுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். ஒரு வழியாக நான் விரும்பியபடி ஆனது எவ்வளவு நன்றாக இருக்கிறது என்பதை என்னால் விவரிக்க முடியவில்லை. மூன்றாம் பாலின சமூகத்தை சேர்ந்த பலர் என்னை இன்ஸ்பையர் செய்துள்ளனர். உங்களின் நம்பிக்கைக்கு நன்றி. என்னால் முடிந்த ஆதரவை நான் அளிப்பேன். என் சந்தோஷம் உண்மை தான். நான் தற்போது மகிழ்ச்சியாக இருந்தாலும் பயமாகவும் இருக்கிறது என்பது தான் உண்மை. வெறுப்பு, ஜோக்குகள் மற்றும் வன்முறையை நினைத்து பயப்படுகிறேன். மூன்றாம் பாலினத்தவர்களை பாகுபாடு பார்த்து ஒதுக்கி வைப்பது மோசமாக இருக்கிறது. 2020ம் ஆண்டில் மட்டும் குறைந்தது 40 மூன்றாம் பாலினத்தவர் கொலை செய்யப்பட்டுள்ளனர். அதில் பெரும்பாலானோர் கருப்பின மற்றும் லேடின் மூன்றாம் பாலின பெண்கள்.


நான் ஒரு மூன்றாம் பாலின ஆள் என்பது சந்தோஷமாக இருக்கிறது. மூன்றாம் பாலினம் என்பதால் கஷ்டப்படும் அனைவருக்கும் ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன், நான் உங்களை கவனித்துக் கொண்டிருக்கிறேன், நேசிக்கிறேன், இந்த உலகம் நல்லவிதமாக மாற என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன் என்று பதிவிட்டுள்ளார். இதனை ஹாலிவுட் பிரபலங்கள் பலரும் வரவேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.