வியாஸ்காந்த் விஜயகாந்த், முதலாவது விக்கெட்டை வீழ்த்தினார்

லங்கா பிரீமியர் லீக்கில் ஜப்னா ஸ்டாலியன்ஸிற்காக தெரிவான வியாஸ்காந்த், சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகத்தை பெற்ற யாழ்ப்பாணத்தை சேர்ந்த வியாஸ்காந்த் விஜயகாந்த் தனது முதலாவது சர்வதேச விக்கெட்டை வீழ்த்தினார்.

வியாஸ்காந்த் கொழும்பு கிங்ஸ் அணியின் தலைவர் அஞ்சலோ மத்தியூசை வீழ்த்தினார்.

யாழ் மத்திய கல்லூரியின் விளையாட்டு வீரரான வியாஸ்காந்த், இன்று ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணியின் ஆடும் பதினொருவர் அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டார்.

லங்கா பிரீமியர் லீக்கில் ஜப்னா ஸ்டாலியன்ஸிற்காக தெரிவான வியாஸ்காந்த், அந்த அணி ஆடிய முதல் 04 ஆட்டங்களிலும் இணைத்துக் கொள்ளப்படாதிருந்தார். இதனால் தமிழ் கிரிகெட் இரசிகர்கள் கொஞ்சம் அதிருப்தியடைந்த நிலையில் வலைத் தலங்களில் பல பதிவுகளை இட்டு வந்தனர்.

இந்நிலையில், கொழும்பு கிங்ஸ் அணியுடனான இன்றைய போட்டியில் வியாஸ்காந்த் இணைத்துக் கொள்ளப்பட்டார்.

சுழற்பந்து வீச்சாளரான விஜாஸ்காந்த் இன்று ஆட்டமிழக்காமல் 03 ஓட்டங்களை பெற்றார்.

முதலில் ஆடிய ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 09 விக்கெட் இழப்பிற்கு 148 ஓட்டங்களை பெற்றுள்ளது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடி வரும் கொழும்பு கிங்ஸ் அணி தற்போது 16.0 ஓவரில் 03 விக்கெட் இழப்பிற்கு 123 ஓட்டங்களை பெற்றுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.