நாடு திரும்புவர்களின் தனிமைப்படுத்தல் காலத்தை 14 நாட்களாகக் குறைக்க முடிவு.

நாடு திரும்புவர்களின் தனிமைப்படுத்தல்
காலத்தை 14 நாட்களாகக் குறைக்க முடிவு

வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பும் இலங்கையர்களின் தனிமைப்படுத்தல் கால அளவை 28 நாட்களில் இருந்து 14 நாட்களாகக் குறைக்கப்படவுள்ளது எனக் கொரோனாத் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும் இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

கட்டாயத் தனிமைப்படுத்தப்பட்ட காலத்தைத் தொடர்ந்து நடத்தப்படும் பி.சி.ஆர். பரிசோதனைகளுக்குப் பிறகு அவர்கள் மேலும் 14 நாட்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட அவசியமில்லை என்றும் அவர் கூறினார்.

வெளிநாடுகளிலிருந்து வருகை தரும் அனைவரும் விமான நிலையத்திலேயே பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர், அரசால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தல் நிலையங்கள் அல்லது ஹோட்டல்களில் தனிமைப்படுத்த அனுப்பப்படுகின்றார்கள்

அங்கு 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட காலம் முடிந்ததும் பி.சி.ஆர். பரிசோதனைகளில் தொற்று உறுதியாகாவிட்டால் அவர்கள் வீட்டுக்கு அனுப்பப்படுவார்கள். தொற்று உறுதியானால் மருத்துவமனைகளுக்கு அனுப்பப்படுவார்கள் .

அத்துடன், தொற்று உறுதியாகாதவர்களை இனி தமது வீடுகளில் 14 நாள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த வேண்டிய அவசியமில்லை என்றும் இராணுவத் தளபதி மேலும் கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.