பெண்ணொருவர் பிரசவித்த இரட்டை சிசுக்களை மண்ணில் புதைத்ததாக வாக்குமூலம்.

வெட்கத்தினால் குழந்தையை புதைத்தாராம்

கிளிநொச்சி மாவட்டத்தின் தர்மபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரமந்தனாறு பகுதியில் பெண்ணொருவர் பிரசவித்த இரட்டை சிசுக்களை மண்ணில் புதைத்ததாக பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

இது குறித்து மேலும் தெரிய வருவதாவது,

பிரமந்தனாறு பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் மயக்கமடைந்த நிலையில் மீட்கப்பட்டு கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள். அவருடைய உடலில் குழந்தை பிறந்தமைக்கான ஆதாரங்கள் காணப்பட்டப்பட்ட நிலையில் அதுதொடர்பாக பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

அங்கு சென்ற கிளிநொச்சி பொலிஸார் அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், தனக்கு இரட்டை குழந்தை பிறந்ததாகத் தெரிவித்ததார், காட்டுப்பகுதிக்கு சென்று குழந்தை பிரசவித்து விட்டு திரும்பி வந்தபோது மயக்கமடைந்துள்ளார். அவற்றை புதைத்துவிட்டதாகத் தெரிவித்திருக்கின்றார்.

இருந்தபோதிலும் புதைக்கப்பட்ட இடம் பிரமனந்தனாறு என்றும், உழவனூர் என்றும் மாறி மாறி தகவல்களை வழங்கிவருவதால் குழந்தை புதைக்கப்பட்ட இடத்தினை கண்டுபிடிப்பதில் நெருக்கடி நிலைஏற்பட்டது இருப்பினும் நேற்றைய தினம் இரவு தீவிர தேடுதலின் பின் இரட்டை குழந்தைகளும் மண்ணிலிருந்து சடலங்களாக தோண்டியெடுக்கப்பட்டன.

அந்த பெண்ணிற்கு வளர்ந்த பிள்ளைகள் உள்ளதாகவும், கணவர் இல்லாத நிலையில் குழந்தை பிரசவிப்பதில் வெட்கத்தினால் குழந்தையை மண்ணில் புதைக்காக தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.