தோட்டப் பகுதிகளிலும்  கொரோனா விழிப்புணர்வு செயற் திட்டம்.

ஹற்றன் , கொட்டக்கலை நகரிங்களிலும் அதன்  புறநகர்ப்புற தோட்டப் பகுதிகளிலும்  கொரோனா விழிப்புணர்வு செயற் திட்டம். முன்னெடுக்கப்பட்டது.

கொவிட் 19 கொரோனா தொற்றில் இருந்து மக்களை வருமுன் காப்போம்  எனும் தொனிப்பொருளில் விழிப்புணர்சுவு சுவரொட்டிகள், துண்டுப்பிரசும் விநியோகம் , ஒலிபெருக்கி அறிவுறுத்தல் ஊர்வலம்  ஆகிய  செயற் திட்டம் மனித அபிவிருத்தி தானம், ஹற்றன் பொலிஸார். கொட்டக்கலை பிரதேச சபை சுகதார வைத்திய அலுவலகம், பிரதேச செயலகம்  ஆகின இணைந்து முன்னெடுக்கப்பட்டது.

மனித அபிவிருத்தி தாபனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் பி. பி. சிவப்பிரகாசம் தலைமையில் இடம்பெற்ற விழிப்புணர்வு செயற்திட்ட நிகழ்வில்   ஹற்றன் டிக்கோயா நகர பிதா பாலச்சந்திரன், கொட்டக்கலை பிரதேச சபைத் தவிசாளர் ராஜமணி பிரசாத் முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் கனபதி கனகராஜ், கொட்டுக்லை பிரதேச சபை உறுப்பினர்களான பாலசுப்ரமணியம், மணி, கொட்டக்கலை சுகாதார பரிசோதகர் சௌந்தர்ராஜவன், அயூர்வேத வைத்தி அதிகாரி அனான், பிரதேச செயலக அலுவலக அதிகாரிகள், பிரதேச சிவில் சமூக அமைப்பினர்கள்  உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
ஹற்றன் பஸ்தரிப்பு நிலையத்தில் ஆரம்பிக்கப்பட்ட விழிப்புணர்வு செயற் திட்டம் ஹற்றன் பிரதான வீதி மணிக்கூட்டுக் கோபுரம் மல்லிகைப்புச் சந்தி வரையிலும் வழிப்புணர்வு செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.

அடுத்து கொட்டகலை பிரதேச சபை அலுவலக முன்வாயலில் ஆரம்பிக்கப்பட்ட விழிப்புணர்வு செயற் திட்டம்  கொட்டகலை பிரதான வீதி   புற நகரங்கள் மக்கள் கூடும் பொது இடங்களில் முன்னெடுக்கப்பட்டன.

பொது மக்கள் பின்பற்ற வேண்டிய சுகாதார நடைமுறைகள், மற்றும் கொரோனா தொடர்பான தகவல்கள் உள்ளடங்கிய துண்டுப் பிரசுரங்கள் சுவரொட்டிகள் ஒலிபெருக்கி அறிவுறத்தல்கள் என்பன இடம்பெற்றன.

இக்பால் அலி

Leave A Reply

Your email address will not be published.