நாட்டுக்கோழி பூண்டு  பிரட்டல்.

நாட்டுக்கோழி – 1/4 கிலோ,
சின்ன வெங்காயம் – 200 கிராம்,
தக்காளி – 2,
பச்சைமிளகாய் – 3,
இஞ்சி – 1 துண்டு,
பூண்டு – 15 பல்,
மிளகாய்த்தூள் – 20 கிராம்,
தனியாத்தூள் – 30 கிராம்,
சீரகத்தூள் – 10 கிராம்,
மிளகுத் தூள் – 10 கிராம்,
சோம்பு தூள் – 10 கிராம்,
கரம்மசாலாத்தூள் – 10 கிராம்,
நல்லெண்ணெய் – 200 மி.லி.,
கொத்தமல்லித்தழை,
கறிவேப்பிலை,
உப்பு – தேவைக்கு.

எப்படிச் செய்வது?

சிக்கன், சின்ன வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாயை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். மிக்சியில் இஞ்சி, பூண்டு சேர்த்து அரைத்துக் கொள்ளவும். கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம், சிக்கன் சேர்த்து வதக்கி, தக்காளி, பச்சைமிளகாய், கறிவேப்பிலை போட்டு வதக்கவும். இத்துடன் சிறிது தண்ணீர், நறுக்கிய பூண்டு, உப்பு, அனைத்து மசாலாத்தூள் சேர்த்து கிளறவும். எண்ணெய் பிரிந்து வந்ததும் கொத்தமல்லித்தழையை தூவி பரிமாறவும்.

Leave A Reply

Your email address will not be published.