3,611 ஆக உயர்ந்தது சிறைக் கொத்தணி! – மகசின் சிறையில் அதிக தொற்றாளர்கள்

சிறைச்சாலைகளில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 611 ஆக அதிகரித்துள்ளது.

இன்று புதிய நோயாளர்களாக 11 பேர் அடையாளம் காணப்பட்டதையடுத்து இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது எனச் சிறைச்சாலைகள் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இந்த மொத்தத் தொற்றாளர்களில் மகசின் சிறைச்சாலையிலேயே அதிகளவான கொரோனா நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். மகசின் சிறைச்சாலையில் இதுவரை 824 பேருக்குக் கொரோனாத் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

வெலிக்கடை சிறைச்சாலையில் 813 பேருக்கும், மஹர சிறைச்சாலையில் 745 பேருக்கும், கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் 390 பேருக்கும், நீர்கொழும்பு சிறைச்சாலையில் 58 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி இதுவரை செய்யப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் சிறைச்சாலைகளில் கொரோனாத் தொற்றுக்குள்ளானவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளவர்களில் இதுவரை 2 ஆயிரத்து 857 பேர் குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.