கோட்டா அரசின் விரோத செயல் சஜித் கண்டனம்.

கோட்டா அரசின் விரோத செயல்
சஜித் கண்டனம்.

“ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசு, ஊடகங்களை அடக்க முயற்சிக்கின்றது. அதன் ஒரு வெளிப்பாடே ‘உதயன்’ மீதான வழக்கு. இது இந்த அரசின் ஜனநாயக விரோத செயலாகும். பிரதான எதிர்க்கட்சி என்ற ரீதியில் இதை நாம் மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.”

– இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ வெளியிட்டுள்ள கண்டனத்தில் தெரிவித்துள்ளார்.

அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

“பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் ‘உதயன்’ பத்திரிகை மீது வழக்குத் தாக்கல் செய்தமைக்கு பொலிஸார் முன்வைத்துள்ள காரணம் ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல. இது ஊடக சுதந்திரத்தை – கருத்துச் சுதந்திரத்தை மழுங்கடிக்கும் செயலாகும்.

யார் ஆட்சிப்பீடத்தில் இருந்தாலும் ஊடகங்களுக்கான சுதந்திரம் மிகவும் அவசியம். அந்தச் சுதந்திரத்தை எவரும் சட்டங்கள் கொண்டு அடக்க முடியாது.

கடந்த நல்லாட்சியில் ஊடகங்களின் கருத்துச் சுதந்திரம் பேணிப் பாதுகாக்கப்பட்டது. ஆனால், இந்த ஆட்சியில்  ஊடகங்களின் கருத்துச் சுதந்திரம் திட்டமிட்டுப் பறிக்கும் செயல்கள் இடம்பெறுகின்றன. இதற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி தொடர்ந்து குரல் கொடுக்கும்” – என்றுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.