நல்லூர் பிரதேச சபையின் தவிசாளராக மதுசுதனைக் களமிறக்குகின்றது கூட்டமைப்பு!நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் தெரிவுக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் கு.மதுசுதனை நிறுத்துவதற்குத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது எனத் தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தேசிய அமைப்பாளர் குருசாமி சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.

இரண்டு தடவைகள் நல்லூர் பிரதேச சபையின் 2021ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டு தோல்வியடைந்ததால் தவிசாளர் தா.தியாகமூர்த்தி தனது பதவியை இழந்திருந்தார்.

இதனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் தெரிவுக்கு யாரை நிறுத்துவது என இறுதித் தீர்மானம் எடுக்கும் கூட்டம் இன்று மாலை யாழ்ப்பாணத்திலுள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமைச் செயலகத்தில் இடம்பெற்றது.

குறித்த கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் பிரதிநிதிகள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நல்லூர் பிரதேச சபை உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் தெரிவு நாளை பிற்பகல் 2 மணிக்கு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.