குரோஷியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 7 பேர் உயிரிழந்தனர், 20 பேர் காயமடைந்தனர்.

குரோஷியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 7 பேர் உயிரிழந்தனர், 20 பேர் காயமடைந்தனர்.

குரோஷியாவின் பெட்ரின்ஜா நகரத்தில் ரிக்டர் அளவில் 6.4 ஆக பாதிவான நிலநடுக்கத்தால் அங்குள்ள வீடுகள் குலுங்கின. சில வீடுகள் இடிந்து விழுந்தன.

இதில் குறைந்தது 7 பேர் உயிரிழந்ததாகவும், 20 பேர் காயமடைந்துள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குரோஷிய தலைநகர் ஜாக்ரெப்பிலிருந்து தென்கிழக்கே 50 கி.மீ தொலைவில் உள்ள பெட்ரிஞ்சா என்ற சிறிய நகரத்தில் இந்த பூகம்பம் மதியம் 12.19 மணியளவில் தாக்கியதாக செவ்வாயன்று, ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளதாக சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

குரோஷியாவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் அண்டை நாடுகளான செர்பியா, ஸ்லோவேனியா மற்றும் ஆஸ்திரிய தலைநகர் வியன்னா வரை உணரப்பட்டது.

மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பிருப்பதால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச்செல்லப்பட்டனர்.

Leave A Reply

Your email address will not be published.