புதுவருடத்தினை வரவேற்கும் முகமாக வணக்கஸ்த்தலங்களில் சர்வமத வழிபாடுகள்.

கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அறிவுறுத்தலுக்கமைய கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தினால் வருடந்தோறும் புதுவருடத்தினை வரவேற்கும் முகமாக வணக்கஸ்த்தலங்களில் சர்வமதவழிபாடுகளை நடாத்தி வருகின்றனர்

இவ்வருடமும்
நாட்டு மக்கள் அனைவருக்கும் சாந்தி, சமாதானம், சௌபாக்கியம் கிடைப்பதற்கும், அனைவரும் கொரோனா தாக்கத்திலிருந்து விடுபட்டு நல்வாழ்வு வாழ வேண்டிப் பிரார்த்தனை வழிபாடுகள் நடாத்தப்படவுள்ளது.

கண்டாவளைப் பிரதேச செயலர் பிரிவில் புளியம்பொக்கனை நாகதம்பிரான் ஆலயத்திலும், கரைச்சிப் பிரதேச செயலர் பிரிவில் லும்மினி விகாரையிலும் பச்சிலைப்பள்ளியில் பிரதேச செயலர் பிரிவில் கிளாலி புனித யாகப்பர் தேவாலயத்திலும், பூநகரி பிரதேச செயலர் பிரிவில் நாச்சிக்குடா முகைதீன் யும்மா பள்ளி வாசலிலும் இவ்விசேட வழிபாடுகளை நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

முதலாவது நிகழ்வாக 06.01.2021ஆம் திகதி புதன்கிழமை மதியம் 12.00மணிக்கு புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலயத்தில் விசேட வழிபாடு இடம்பெற்றது

இந்நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.க.ஶ்ரீமோகனன், கண்டாவளை பிரதேச செயலர் திரு.த.பிருந்தாகரன், மாவட்ட கலாசார உத்தியோகத்தர் திரு.கா.இராசதுரை மற்றும் மாவட்ட, பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், கலைஞர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.