ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்த போதிலும் அம்பாறை மாவட்ட மக்கள் வழமையான செயற்பாடு.

அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும் வட கிழக்கில் ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்த போதிலும் அம்பாறை மாவட்ட மக்கள் வழமையான செயற்பாட்டில் இன்று (11) ஈடுபட்டுள்ளனர்.

அம்பாறை மாவட்டத்தின் கல்முனை,  சவளக்கடை, சம்மாந்துறை, மத்தியமுகாம்,திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இன்று உணவகங்கள், புடவைக்கடைகள், வீதியோர வியாபாரங்கள் போன்றவைகள் வழமை போன்று இயங்கியது.

இப்பகுதியில் உள்ள சில பாடசாலைகளில் மாணவர் வரவு குறைந்துள்ள போதிலும் கற்றல் செயற்பாடு இடம்பெற்றதை அவதானிக்க முடிந்தது.

இம்மாவட்டத்தில் வழமை போன்று அதிகளவிலான பொதுமக்கள் முண்டியடித்துக் கொண்டு பொருள் கொள்வனவில் ஈடுபட்டு வந்தததையும் அவதானிக்க முடிந்தது.

அத்தோடு பொதுமக்கள் ஒன்றுகூடும் இடங்களுக்குச் சென்று பொலிஸாருடன் இணைந்து இராணுவம் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டனர்.

அத்துடன் கல்முனை மற்றும் திருக்கோவில் பொதுச்  சந்தை உட்பட அதனை சூழ உள்ள பாதையோரங்களில் மரக்கறி , புடவைக்கடை வியாபாரம் களைகட்டியது.

மேலும் வியாபார நிலையங்கள் , சுப்பர்மார்க்கெட்டுகள், பாடசாலைகள், பாமசிகள், வங்கிகள் ,எரிபொருள் நிலையங்கள் வழமை போன்று திறக்கபட்டடு வியாபாரம் இடம்பெற்றது.

எனினும் சில இடங்களில் பொதுமக்களின் வருகை இன்மையால் வியாபார  டவடிக்கைகளும் ஸ்தம்பிதம் அடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

சதாசிவம் நிரோசன்

Leave A Reply

Your email address will not be published.