பிள்ளையான் விடுதலையாகிறார்?

முன்னாள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் கொலைக் குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்க வாய்ப்பு சிவனேசதுரை சந்திரகாந்தனுக்கு ஏற்பட்டுள்ளது. சிவநேசதுரை சந்திரகாந்தன் உள்ளிட்ட ஐவருக்கு எதிரான வழக்கை சட்ட மா அதிபர் திணைக்களம் இன்று (11) மீள பெற்றுக்கொண்டுள்ளது. சட்டமா அதிபர் வழக்கை மீளப் பெற்றதன் காரணமாக அவர் விடுதலை ஆகலாம் என தெரிகிறது.

இந்த வழக்கு இன்று மட்டக்களப்பு உயர்நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டபோது, ​​சட்டமா அதிபரை பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டமா அதிபர் துறை அதிகாரிகள் இந்த வழக்கைத் தொடர விரும்பவில்லை என நீதிமன்றத்திற்கு தெரிவித்தனர்.

சிவனேசதுரை சந்திரகாந்தன் உட்பட ஐந்து சந்தேக நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, சந்தேக நபர்கள் நீண்ட காலமாக தடுப்புக் காவலில் இருந்தனர். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட சிவனேசதுரை சந்திரகாந்தன் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்ற பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

சம்பந்தப்பட்ட வழக்கு அடுத்த புதன்கிழமை மீண்டும் விசாரிக்கப்பட உள்ளது, அப்போது உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பை அறிவிக்கும்.

Leave A Reply

Your email address will not be published.