ரியோவை காலி செய்த அர்ச்சனா.. கூடா நட்பு கேடாய் போனது

ஆரம்பத்தில் பிக் பாஸ் வின்னர் விஜய் டிவியின் ரியோ தான் என்கிற அளவுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று இருந்தவர் திடீரென தன்னுடைய மதிப்பை குறைத்துக் கொண்டு தற்போது மூன்றாம் இடம் பிடித்தது ரசிகர்களுக்கு அதிர்ச்சி தான். அதற்கு காரணம் முழுக்க முழுக்க அர்ச்சனா தானாம்.

அர்ச்சனாவுடன் சேர்ந்த யாருமே இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் மக்களிடையே நல்ல வரவேற்பு பெறவில்லை. தனக்கென ஒரு கூட்டத்தை சேர்த்துக்கொண்டு மற்றவர்களை இழிவுபடுத்தி வந்தவர்தான் அர்ச்சனா. அதுவும் நடிகர் ஆரி யைப் பற்றி புறம் பேசியதெல்லாம் உச்சகட்டம்.

அதில் ரியோ மட்டும் ஓரளவு தப்பித்துக் கொண்டார். தன்னுடைய ரசிகர் பட்டாளத்தை வைத்து கடைசி வரைக்கும் வந்த ரியோ யாரும் எதிர்பார்க்காத வகையில் மூன்றாம் இடத்தை பிடித்து வெளியேறினார். பாலாவுக்கு கூட இரண்டாம் இடம் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

அர்ச்சனாவுடன் சேர்ந்ததாகும் என்னமோ மக்கள் மொத்தமாக ரியோ வச்சு செய்து விட்டனர். தனியாக தன்பாட்டுக்கு விளையாடி இருந்தால் கண்டிப்பாக அறிவுதான் டைட்டில் வின்னர் ஆகி இருப்பார் என்கிறார்கள் பிக்பாஸ் வட்டாரங்கள். தான் கெட்ட குரங்கு தன் வனத்தையும் சேர்த்து கெடுக்கும் என்பது ரியோ வாழ்க்கையில் அர்ச்சனா வால் நடந்துவிட்டது.

bigg-boss-4-title-winner

அதுவும் ஆரி வெற்றியாளர் என அறிவிக்கும் போது ரியோ மற்றும் அர்ச்சனா முகத்தில் ஈ ஓடியதை சமூக வளைதளத்தில் செம்மையாக கிண்டலடித்து வருகின்றனர். தொகுப்பாளராக இருந்தபோது அர்ச்சனாவுக்கு இருந்த வரவேற்பு பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பறி போனது குறிப்பிடத்தக்கது. முன்னரெல்லாம் அர்ச்சனா பேசினால் ரசிக்க ஒரு கூட்டமே இருந்த நிலையில் தற்போது வாயைத் திறக்காத சாமி என கும்பிடு போடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.