கிழக்குக் கடற்பரப்பில் லைபீரிய கப்பல் விபத்து.

கிழக்குக் கடற்பரப்பில் லைபீரிய கப்பல் விபத்து.

திருகோணமலை கடற்பரப்பில் லைபீரிய நாட்டுக்குச் சொந்தமான வர்த்தகக் கப்பல் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அபூதாபியில் இருந்து திருகோணமலை துறைமுகத்துக்குச் சீமெந்து கொண்டு வரும் கப்பளே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது எனக் கடற்படை ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

யால சாரணாலயத்தின் இலுக்குபட்டி முனையில் இருந்து 10 கிலோ மீற்றர் தொலைவில் இந்தக் கப்பல் விபத்துக்குள்ளாகியுள்ளது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த கப்பல் ஆழமில்லா கடற்பரப்புக்கு வந்துள்ளது எனவும், அங்கு கற்பாறையில் மோதியுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீட்புப் பணிகளுக்காக இலங்கைக் கடற்படையின் படகுகள் குறித்த பிரதேசத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன எனவும் கடற்படை ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது

Leave A Reply

Your email address will not be published.