ஐ.நா. பாதுகாப்புச் சபையில் ரஷ்யாவும் சீனாவும் இலங்கைக்கு உதவும்! கோட்டா அரசு நம்பிக்கை.

ஐ.நா. பாதுகாப்புச் சபையில் ரஷ்யாவும் சீனாவும் இலங்கைக்கு உதவும்!கோட்டா அரசு நம்பிக்கை

“சர்வதேச தடைகள் குறித்த அச்சம் காரணமாக நாங்கள் இழைக்காத குற்றங்களை இழைத்ததாக ஏற்றுக்கொள்ளமாட்டோம். தடைகள் ஏதாவது விதிக்கப்படும் என்றால் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையே அதனைச் செய்ய வேண்டும். எனினும், எமக்கு உதவ ரஷ்யாவும் சீனாவும் பாதுகாப்புச் சபையில் உள்ளன.”

இவ்வாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“ஐ.நா. தீர்மானத்திலிருந்து விலகிய அரசின் முடிவு புத்திசாலித்தனமானது. தற்போது எங்களால் சுதந்திரமாகப் பதில்களை வழங்க முடியும். அதனையே நாங்கள் செய்கின்றோம்.

ஐ.நா. மனித உரிமைகள் சபை தீர்மானங்களைக் கொண்டு வரலாம். ஆனால், நாங்கள் அதற்குக் கட்டுப்பட வேண்டியதில்லை.

ஐ.நா. மனித உரிமைகள் சபை எழுப்பிய கேள்விகளுக்கு முன்னைய அரசால் உரிய பதில்களை வழங்க முடியவில்லை எனவும் கூறியுள்ளார்.

முன்னர் இணை அனுசரணை வழங்கியதால் எங்களுக்குப் பொறுப்பு இருந்தது. ஆனால், தற்போது அது இல்லை. குற்றச்சாட்டு குறித்து நாங்கள் பதில் அளிக்கலாம்.

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கைக்கு இலங்கை சமர்ப்பித்துள்ள பதில் அறிக்கை குறித்து சாதகமான பதில் கிடைக்கும்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.