இலங்கை மற்றும் இந்தியாவுக்கிடையில் சுகாதார வழிகாட்டிகளுக்கு அமைவாக மீண்டும் விமான சேவை.

இலங்கை மற்றும் இந்தியாவுக்கிடையில் சுகாதார வழிகாட்டிகளுக்கு அமைவாக மீண்டும் விமான சேவை ஆரம்பமாகவுள்ளது.
விமான சுற்றுலா துறையை ஊக்குவிக்கும் வகையில் இதனை நடைமுறைப்படுத்துவதில் கவனம் செலுத்துவதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் மூலம் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு உட்பட்டதாக ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டது.
இந்த நாட்டின் சுகாதார பிரிவு மற்றும் இந்திய உள்நாட்டலுவல்கள் சமர்ப்பித்துள்ள சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய இதனை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் 2 நாடுகளும் கவனம் செலுத்துவதாக அமைச்சர் கூறினார்.
இந்திய உள்நாட்டலுவல்கள் அமைச்சு தற்பொழுது இந்நாட்டுக்கு வரக்கூடிய மற்றும் அந்நாட்டில் இருந்து வெளியே செல்லக்கூடிய விமான பயணிகள் தொடர்பிலான வழிகாட்டிகளை வெளியிட்டுள்ளது.
இத்தோடு இதுதொடர்பில் உடன்பாடு தெரிவிக்கப்படுமாயின், இந்த திட்டத்தை ஆரம்பிக்க முடியும் என்று இந்திய தூதுவர் அரசாங்கத்திற்கு ஆலோசனை தெரிவித்துள்ளார்.
இதற்கமைவாக இந்த ஆலோசனை தொடர்பில் நாட்டின் சுகாதார அதிகாரிகள் மற்றும் கொவிட் தொற்றை கட்டுப்படுத்தும் குழுவினருடன் விரைவாக பேச்சுவார்த்தை நடத்த எதிர்பார்ப்பதாவும் அமைச்சர் கூறினார்.
இதேவேளை கடந்த ஜனவரி மாதத்தில் 1,682 சுற்றுலா பயணிகள் வருகை தந்திருப்பதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கொவிட் -19 தொற்றுக்கு பின்னர் சுற்றுலா பணிகளுக்காக நாடு கடந்த 21 ஆம் திகதி திறக்கட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.