ஜனாஸா நல்லடக்க விவகாரம் குறித்து விசேட அறிவிப்பு!

ஜனாஸா நல்லடக்க விவகாரம் குறித்து கொவிட் நோய்க் கட்டுப்பாட்டு இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்ணான்டோபுள்ளே விசேட அறிவிப்பு!

கொரோனா தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்வது தொடர்பான இறுதி முடிவை சுகாதார அமைச்சின் தொழில்நுட்பக் குழுவே எடுக்கவேண்டுமென கொரோனா நோய்க் கட்டுப்பாட்டு இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்ணான்டோபுள்ளே இன்று நாடாளுமன்றில் தெரிவித்தார்.
ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்ய முடியுமென பிரதமர் நேற்று சபையில் அறிவித்திருந்த நிலையிலேயே இராஜாங்க அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் கருத்து வெளியிடுகையில், பிரதமர் தீர்மானமொன்றை மேற்கொண்டு நாடாளுமன்றில் அறிவித்ததன் பின்னரும் அதனை அமைச்சொன்று நிராகரிப்பதோ, மாற்றியமைப்பதோ சரியானதாக இருக்க முடியுமா என கேள்வி எழுப்பினார்.

Leave A Reply

Your email address will not be published.