தம்பிலுவில் சமுர்த்தி வங்கி மற்றும் சமுர்த்தி மகாசங்கம் கணனி மயமாக்கப்பட்டது.

நாடுபூரகவும் உள்ள சமூர்த்திவங்கிகள் மற்றும் சமூர்த்தி மகாசங்கங்கள் ஆகியவை கணனி மயமாக்கப்பட்டுவரும் நிகழ்ச்சித்திட்டத்தின் ஒரு அங்கமாக 2021.02.09 ம் திகதி திருக்கோவில் பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட தம்பிலுவில் சமுர்த்திவங்கி மற்றும் சமுர்த்தி மகாசங்கம் ஆகியவை கனிணி மயமாக்கப்பட்டது.

இந் நிகழ்வில் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.ஜெகதீசன் அவர்கள் கெளரவ அதியாக கலந்துகொண்டு இன் நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.

மேலும் இன் நிகழ்வில் திருக்கோவில் பிரதேச செயலாளர் T.கஜேந்திரன் மற்றும் உதவிப்பிரதேச செயலாளர் K.சதிசேகரன் ,திருக்கோவில் பிரதேச செயலக உதவித்திட்டமிடல் பணிப்பாளர் M.அனோஜா ,திருக்கோவில் பிரதேச சமூர்த்தி முகாமையாளர் தி.பரமானந்தம் மற்றும் திருக்கோவில் பிரதேச செயலக உத்தியோர்த்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

சதாசிவம் நிரோசன்

Leave A Reply

Your email address will not be published.