புதிய துடுப்பாட்ட பயிற்சியாளராக சஞ்சய் பாங்கர் தெரிவு.

ஆர்.சி.பி அணியின் புதிய துடுப்பாட்ட பயிற்சியாளராக சஞ்சய் பாங்கர்

இந்தாண்டிற்கான ஐ.பி.எல் போட்டிகள் வருகின்ற ஏப்ரல்-மே மாதங்களில் கோலகலமாக நடைபெற இருக்கிறது. இந்நிலையில், சென்னையில் வருகின்ற 18 ஆம் தேதி ஐபிஎல் வீரர்களை தேர்ந்தெடுக்கும் ஏலமும் மிகப்பெரிய நடைபெற இருக்கிறது. ஏலம் தொடங்வதற்கு முன்னதாகவே ஐ.பி.எல் ஆடும் நடப்பு அணிகள் தங்கள் வசம் இருந்த 57 வீரர்களை விடுவித்து. ஒவ்வொரு அணியும் சில புதிய டிரேட் மற்றும் மாற்றங்களை செய்து வருகிறது.

அதன்படி பல ஆண்டுகளாக பல மாற்றங்களை செய்து வரும் ஆர்சிபி அணி இம்முறை தங்களது அணியின் புதிய பேட்டிங் ஆலோசகராக சஞ்சய் பாங்கரை நியமித்துள்ளது. 2014 இல் இந்திய இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் படுதோல்வி அடைந்த பிறகு இந்திய அணிக்கு பேட்டிங் பயிற்சியாளராக சஞ்சய் பாங்கர் நியமிக்கபட்டார். அது தொடங்கி 2019 உலகக் கோப்பை வரை நீடித்தார்.

அதன் பின்பு தற்பொழுதைய இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளராக விக்ரம் ரத்தோர் நியமிக்கப்பட்டுள்ளார்.சஞ்சய் பங்கர் 2014ஆம் ஆண்டு கிங்ஸ் லெவென் பஞ்சாப் அணிக்காக அஸிஸ்டன்ட் கோச்சாக இருந்தார் என்பதும் குறிப்பிடதக்கது. இந்தியாவுக்காக இதுவரை 12 டெஸ்ட் போட்டிகளிலும் 15 ஒருநாள் போட்டிகளிலும் சஞ்சய் பாங்கர் விளையாடியுள்ளார்.

அதனைத்தொடர்ந்து இந்தாண்டும் பெங்களூரு அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் வகையில் தங்களது அணியில் முக்கிய மாற்றங்களை செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் பெங்களூரு அணியில் கோலி, சாஹல் மற்றும் டிவில்லியர்ஸ் தவிர மற்ற யாரும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.