பருத்தித்துறை-மருதங்கேணி வீதி. அதிகாரிகள் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.

வேலைகள் முடிவுறாத நிலையில் சேதடையும் பருத்தித்துறை-மருதங்கேணி வீதி. அதிகாரிகள் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.பருத்தித்துறை மருதங்கேணி காப்பெற் வீதி சிதைவடைந்து காணப்படுவதுடன் சிதைவடைந்த பகுதிகளில் மரங்கள் முளைக்கும் நிலை ஏற்படுள்ளதை அவதானிக்க முடிகிறது.

வடமராட்சி கிழக்கு பிரதேசத்தை ஏனைய பிரதேசங்களுடன இணைக்கின்ற பிரதான வீதிகளில் ஒன்றான மேற்படி வீதி யுத்த காலத்துக்குப் பின்னர் நீண்டகாலமாக புனரமைக்கப்படாமையால் மக்களின் கோரிக்கைகளின நிமித்தம் அம்பன் தொடக்கம் மருதங்கேணி வரையிலான 15 கிலோமீற்றர் வீதி காப்பெற வீதியாக அமைக்கும் திட்டம் ஆரம்பித்து 4 வருடங்களாகியும் இன்னமும் வேலைத்திட்டம் முழுமைபெறவில்லை. செம்பியன்பற்று மற்றும் மருதங்கேணி பகுதியில் வேலைகள் நிறைவுறாத நிலையில் ஏற்கனவே நிறைவுபெற்ற நாகர்கோவில் பகுதியில் வீதி சேதமடைந்து வருவதால் வீதி பழைய நிலைமைக்குத் திரும்பிவிடுமோ என மக்கள் அச்சடைகின்றனர்.

இவ்விடயம் தொடர்பாக அண்மையில் நடைபெற்ற பிரதேச ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்திலும் மக்கள் பிரதிநிதிகள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். எனினும் இதுவரை இந்த வீதியை சீரமைக்க நடவடிக்கை இல்லை. எனவே இதுவிடயமாக உரிய தரப்பினர் கவனமெடுக்குமாறு மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.