தந்தை திறந்து வைத்த நினைவுக் கல்லை மீண்டும் திறந்த சஜித்

தந்தை ரணசிங்க பிரேமதாச திறந்துவைத்த நினைவுக் கல்லினை மகன் சஜித்  பிரேமதாசா திறந்து வைத்தார்.
1981ம் ஆண்டு அப்போதய ஜனாதிபதியாக இருந்த ரணசிங்க பிரேமதாசாவினால் நெல்லியடியில் இராஜகிராமம் எனும் கிராமத்தில் வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டதற்கான நினைவுகள் திறந்துவைக்கப்பட்டது.
அந்த கிராமதிற்கு பிரச்சாரத்திற்கு நேற்று பிரச்சாரத்திற்கு சென்ற சஜித் பிரேமதாசா தனது தந்தை திறந்து வைத்த நினைவு கல்லினை மீண்டும் திறந்து வைத்தார்.
மேலும் அக் கிராமத்திற்கு அருகில் தனது தந்தையால் அமைக்கப்பட்ட குளம் ஒன்றினையும் பார்வையிட்டார்.

ரணசிங்க பிரேமதாசாவினால் வழங்கப்பட்ட வீடுகள் தற்போது பழுதடைந்த நிலையில் இருப்பதனை அப்பிரதேச மக்கள் சுட்டிக்காட்டினர். இது தொடர்பில் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.  இவ் தொடர்பில் தான் உரிய கவணம் செழுத்துவதாகவும் சஜித் பிரேமதாசா தெரிவித்தார்.

Comments are closed.