New Update :குறிகாட்டுவான் பகுதிக்கு கடலுணவுகளை எடுத்துச் சென்ற இரு இளைஞர்கள் கடலில் மாயம்.

பிந்திய செய்தி

நெடுந்தீவில் பதற்றம்! இரு மீனவர்கள் திடீர் மாயம்!! – படகு மட்டும் கரை சேர்ந்தது

யாழ்., தீவகம், குறிகாட்டுவானில் இருந்து நெடுந்தீவு நோக்கிப் படகில் பயணித்த மீனவர்கள் இருவர் காணாமல்போயுள்ளனர்.

குறித்த மீனவர்கள் பயணித்த படகு, பாதணிகள் மற்றும் அவர்கள் ஏற்றி வந்த ஐஸ் கட்டிகள் உட்பட்ட பொருட்களுடன் கரையொதுங்கியுள்ளது.

படகில் பயணித்த மூன்று பிள்ளைகளின் தந்தையான ஞானசிங்கம் ரமேஸ் (வயது – 41), ரஞ்சன் மயன் (வயது – 19) ஆகியோரே இன்று காணாமல்போயுள்ளனர். இவர்கள் இருவரும் நெடுந்தீவைச் சேர்ந்தவர்களாவர்.

அவர்களைத் தேடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

காணாமல்போன மீனவர்கள் இயற்கையான ஆபத்தைச் சந்தித்தார்களா? அல்லது அத்துமீறும் இந்திய மீனவர்களால் ஆபத்து விளைவிக்கப்பட்டுள்ளதா? என்று சந்தேகம் நிலவுகின்றது என நெடுந்தீவு மீனவர்கள் தெரிவித்தனர்.

கடற்படை மீனவர்கள் தேடுதல் வேட்டை
நெடுதீவிலிருந்து கண்ணாடி இழைப்படகு மூலம் குறிகாட்டுவான் பகுதிக்கு கடலுணவுகளை எடுத்துச் சென்ற இரு இளைஞர்கள் இதுவரை கரை திரும்பாததால் நெடுந்தீவு மக்கள் மத்தியில் அச்சம் நிலவுகின்றது.

இன்று முற்பகல் 11 மணியளவில் கடலுணவுகளுடன் குறிகாட்டுவான் நோக்கிச் சென்ற இவர்கள் பிற்பகல் 1.30 மணிக்கு குறிகாட்டுவானிலிருந்து திரும்பியுள்ளதாக தெரியவருகின்றது.

ஆயினும் மாலை வரை கரை திரும்பாத நிலையில் அவர்கள் பயணித்த படகு நெடுந்தீவு கிழக்கு அந்தோனியார் கோவில் கடற்கரையில் கரையொதுங்கியுள்ளதை அடுத்து நெடுந்தீவு மக்களிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதன்போது ஞானசிங்கம் றொபின்சன் (ரமேஸ்) (வயது-43), மரியவேதநாயகம் நெயன் (20) ஆகிய இளைஞர்களே காணாமல் போயுள்ளனர்.

இதனையடுத்து மீனவர்களில் பத்துக்கும் மேற்பட்ட படகுகள் காணாமல்போன் இளைஞர்களை தேடி கடலில் இரவிரவாக தேடுதலில் ஈடுபட்டுள்ளதுடன் கடற்படையும் தேடுதலை மேற்கொண்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.