விடுதலை புலிகளது துணுக்காய் சித்திரவதை முகாம் – ஜீவன பஹன் திலின

சிங்களவர்களைக் காட்டிலும் தமிழர்களையே எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர்கள் அதிகமாகத் துன்புறுத்தினார்கள். இரண்டாம் உலகப் போரின்போது நடந்ததைப் போன்றே இங்கும் இரவு வேளைகளில் அவர்கள் தமிழ் குடும்பங்களைக் கொண்டு வந்தார்கள்” – சாந்திலால்

வடக்கில் போர் நடைபெற்றபோது, இராணுவத்தினரையும்,மற்றும் காவல்துறையினரையும் தாக்கி அவர்களை பிடித்துச் சென்று சிறையில் அடைத்து வைக்கும் பழக்கம் எல்.ரீ.ரீ.ஈ யிடம் இருந்தது.

ஆயிரக்கணக்கான படை வீரர்கள் மற்றும் காவல்துறையை சேர்ந்தவர்கள் எல்.ரீ.ரீ.ஈயினால் பாதிக்கப் பட்டார்கள்.

நாட்டை பாதுகாக்கும் கடமைக்காக இராணுவம் மற்றும் காவல்துறையை சோந்தவர்கள் தங்கள் உயிர்களையே தியாகம் செய்துள்ளார்கள். மிகச் சிலர் மட்டுமே எல்.ரீ.ரீ.ஈ யின் பிடியில் இருந்து தப்பி தென்பகுதியை வந்தடைந்தார்கள். அப்படிப் பட்டவர்களின் கதைகளை நாங்கள் சிலோன் ருடேயில் பிரசுரித்திருந்தோம். எனினும் இந்தக் கதையை அப்போதுகூட நாங்கள் வெளிப்படுத்தவில்லை.

இந்தக் கதை விசேடமாக தமிழர்களுக்காக உருவாக்கப் பட்டிருந்த எல்.ரீ.ரீ.ஈயின் சித்திரவதைக் கூடத்தைப் பற்றியது. கோகாலை காவல் நிலையத்தில் தற்பொழுது சுற்றுச்சூழல் பிரிவுக்கு பொறுப்பாகவுள்ள காவல்துறை கண்காணிப்பாளரான சாந்திலால் எல்.ரீ.ரீ.ஈ யின் சிறை முகாம்களில் பெரிய அளவில் பாதிக்கப்பட்ட ஒருவராவார்.

அவரின் கதையை கூட நாங்கள் பகுதி பகுதியாகப் பிரசுரித்திருந்தோம். எனினும் எல்லாவற்றையும் சேர்த்து முற்றிலும் மாறுபட்ட கதை இந்தக் கதை. எல்.ரீ.ரீ.ஈ. தாங்கள் தமிழர்களின் உரிமைகளுக்காகப் போராடுவதாக அறிவித்திருந்ததை நாங்கள் அறிந்திருந்தபோதிலும், அவர்கள் தமது சொந்த இனத்தைச் சேர்ந்த மக்களைக்கூட மிகவும் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தியதைப் பற்றி நாங்கள் அறிந்திருக்கவில்லை. இது ‘சிலோன் ருடே’ யிற்கு சாந்திலால் விபரித்த மற்றொரு கதை.

“எல்.ரீ.ரீ.ஈ தமிழர்களுக்காக விசேட உபசரிப்பு எதனையும் வைத்திருக்கவில்லை. எல்.ரீ.ரீ.ஈ தமிழர்களை மிகவும் அருவருப்பான முறையில் சித்திரவதை செய்ததை நாங்கள் எங்கள் கண்களாலேயே கண்டுள்ளோம்” என அவர் சொன்னார்.

“நான் சொல்லும் இந்த இடம் துணுக்காயில் உள்ளது. மாங்குளத்திலிருந்து முல்லைத்தீவுக்கு செல்லும் வீதியில் உள்ள மல்லாவிதான் துணுக்காய் என்று அழைக்கப் பட்டது. இப்போது இந்த பிரதேசங்கள் யாவும் மக்கள் சுதந்திரமாக வாழ்வதற்காக முற்றாக விடுவிக்கப் பட்டுள்ளன.

எனினும் இது முன்னர் புலிகளால் ; பீடிக்கப்பட்டிருந்த ஒரு பிரதேசம். அடர்ந்து வளர்ந்திருந்த பனைமரங்கள் இந்தப் பிரதேசத்துக்கு ஒரு இருண்ட நிழலைக் கொடுத்திருந்தது.

இந்த இருண்ட நிழலுக்குள் ஆயுதம் ஏந்தியவர்கள் தங்கள் இரையை தேடி சுதந்திரமாக அலைந்து திரிவதுண்டு”.

“துணுக்காய் காட்டின் மத்தியில் காடுகளைச் சுத்தமாக்கிய ஒரு பரந்த பிரதேசத்தில் இந்த சித்திரவதை முகாம்கள் அமைக்கப் பட்டிருந்தன”.

வியட்னாம் முகாம்கள்


ஒரு பார்வையில் அமெரிக்காவுடனான போரின்போது வியட்னாமில் கட்டப்பட்ட முகாம்களைப் போன்று அது காட்சியளித்தது.

அதைச் சுற்றியுள்ள இடங்கள் முற்றிலும் வனாந்தரமாக இருந்தது.  முகாமைச் சுற்றி மிகப் பெரிய முட்கம்பி வேலி போடப்பட்டிருந்தது.

அது 15 அடி உயரமாக இருக்கக்கூடிய சாத்தியம் இருந்தது. அங்கு பல முட்கம்பி வேலிகள் இருந்தன ஒவ்வொரு வேலியிலும் 50க்கு மேற்பட்ட இழைகளைக் கொண்ட கம்பிகள் இருந்தன. அதன் உள்ளில் நெல் களஞ்சிய சாலையை ஒத்த ஒரு ஒற்றைக் கட்டிடம் இருந்தது. கம்பி வேலிக்கு அப்பால் உள்ள பிரதேசத்தில் வேறு பல கட்டிடங்கள் இருந்தன.

மற்ற எல்லா இடங்களிலும் ஏன் மரங்களில் கூட காவல் அரண்கள் அமைக்கப்பட்டிருந்தன. அவர்களிடம் அகப்படாமல் யாராலும் உள்ளே வரவோ அல்லது வெளியே செல்லவோ முடியாது.

எல்.ரீ.ரீ.ஈயின் செயற்பாடுகள் உச்சம் பெற்றிருந்தபோது அது ஒரு உயர் பாதுகாப்பு வலயமாகத் திகழ்ந்தது. வேலிகளைத் தாண்டியுள்ள பிரதேசத்தில் ஏராளமான நிலக்கண்ணி வெடிகள் புதைக்கப்பட்டிருந்தன.

ஒரு பூனை கூட முகாமிலிருந்து வெளியேறாதவாறு பாதுகாப்பு மிகவும் பலமாக இருந்தது.

அந்தப் பகுதிக்குள் நீங்கள் வந்தாலும் கூட, எல்.ரீ.ரீ.ஈ காவலர்களிடம் இருந்து தப்புவது எவருக்கும் சாத்தியமில்லை, அவர்கள் வழக்கமாக அந்த சுற்றாடல் முழுவதையும் தொலைநோக்கி கருவிகள் மூலம் பரிசோதித்துக் கொண்டேயிருப்பார்கள், என்று சாந்திலால் சொன்னார்.


இது அந்த இடத்தின் உள் கட்டமைப்பு. 

எல்.ரீ.ரீ.ஈ இந்த இடத்தை ஒரு யுத்த முகாமாக பயன்படுத்தவில்லை. அது சித்திரவதைக் கூடமாகவே பயன்படுத்தப்பட்டது. “இது எல்.ரீ.ரீ.ஈயில் இருந்த மிகவும் அழகான அங்கத்தவர்களில் ஒருவரான கபில் அம்மானின் கட்டுப்பாட்டின் கீழ் அது இருந்தது. எனினும் அவரது தலைமையின் கீழ் ஆச்சரியமான பல விடயங்கள் இடம்பெற்றன”.

சிங்களக் கைதிகள்

“அங்கு கிட்டத்தட்ட 20 முதல் 30 வரையான சிங்களக் கைதிகள் இருந்தார்கள். மொத்தமாக அங்கு கிட்டத்தட்ட 1,500 கைதிகள் வரை இருந்தார்கள். சிறியளவு சிங்களவர்களைத் தவிர மீதி அனைவரும் தமிழர்கள். சிங்களவர்களைக் காட்டிலும் தமிழர்களையே எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர்கள் அதிகமாகத் துன்புறுத்தினார்கள். இரண்டாம் உலகப் போரின்போது நடந்ததைப் போன்றே இங்கும் இரவு வேளைகளில் அவர்கள் தமிழ் குடும்பங்களைக் கொண்டு வந்தார்கள்”.

“விசேடமாக கைதிகளை ஏற்றிச் செல்வதற்கென்றே லொறிகள் ஒதுக்கப் பட்டிருந்தன. தபால் திணைக்களம் பயன்படுத்தும் இரும்புத் தகடுகள் பொருத்தப்பட்ட ஊர்திகள்; போன்ற அமைப்புள்ள வாகனங்களும் இதற்காக பயன்படுத்தப்பட்டன. தினசரி கிட்டத்தட்ட 100 பேர்கள் வரை கொண்டுவரப் படுவார்கள். அவர்களின் ஆடைகளைக் களைந்துவிட்டு அவர்களை அடிப்பார்கள். இரக்கமின்றி அவர்களை அடித்தவாறே அவர்களிடம் கேள்விகள் கேட்பார்கள். தினசரி மக்கள் அலறுவதை நாங்கள் கேட்டுள்ளோம். அதன்பின்னர் அனைத்துக் கைதிகளையும் சங்கிலிகளால் பிணைப்பார்கள். அந்தச் சங்கிலிகள் கைதிகளின் கால்களுடன் சேர்த்து இணைக்கப் பட்டிருக்கும். பின்னர் திரும்பவும் அவர்களிடம் கேள்விகள் கேட்கப்படும்”.

குழிகள்

“நாங்களும் கூட இந்த முகாமில் உள்ள ஒரு குழியில் தங்கியிருந்தோம். எல்லா இடத்திலும் குழிகள் தோண்டப்பட்டிருக்கும். இந்தக் குழிகளுக்குள்தான் மக்கள் இழுத்து வரப்பட்டு கொட்டப் படுவார்கள்.

எங்களுக்கும் கூட இதே நிலைதான். நாங்களும் கூட ஒரு குழிக்குள் தள்ளப் பட்டிருந்தோம். எங்களைப் போல அல்லாது தமிழ் மக்கள் வித்தியாசமான முறையில் குழிகளுக்குள் போடப்பட்டார்கள். அவர்களில் எவர்மீதும் ஒரு பொட்டுத் துணி கூட இருக்கவில்லை. ஆரம்பத்தில் அவர்கள் கொண்டுவரப்பட்டதும் பலசாலியானவர்கள் வேறுபடுத்தப் பட்டு வெவ்வேறு குழிகளுக்குள் போடப்பட்டார்கள்”.

“அந்தக் குழிகள் சவக்குழிகளை ஒத்ததாக இருந்தன. அவைகள் ஒரேயளவான நீளம் மற்றும் அகலங்களைக் கொண்டிருந்தன. குழியின் மேல் பக்கத்தைச் சுற்றி ஒரு கம்பித்துண்டு நீட்டிக் கொண்டிருக்கும் அவை அனைத்திலும் மின்சாரம் பாய்ச்சப் பட்டிருக்கும் கைதிகள் அந்தக் குழியில் இருந்து எழுந்து நிற்கவோ அல்லது அமர்ந்திருக்கவோ முடியாது. அதற்குள் இருப்பவர்கள் படுத்தபடியே இருக்கவேண்டும். யாராவது எழுந்து நின்றால் அவர் சுட்டுக் கொல்லப்படுவார். இறந்த உடல்களை உள்ளே போட்டு அவர்கள் சவக்குழிகளை மூடிவிடுவார்கள்”.

“அங்கு கொண்டு வரப்பட்டவர்கள் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்), தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ) மற்றும் வேறு சில தமிழ் அமைப்புகள் போன்ற ஏனைய தமிழ் அமைப்புக்களைச் சோந்தவர்களாக இருந்தார்கள். மற்றும் சிலர் இந்திய இராணுவத்துக்கு உதவி புரிந்ததாக குற்றம் சாட்டப்பட்டவர்கள்”.

– ஜீவன பஹன் திலின

Leave A Reply

Your email address will not be published.