பாதாம் கீர் என்றால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.

குழந்தைகளுக்கு பாதாம் கீர் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று இந்த ரெசிபியை வீட்டிலேயே எளிய முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

பாதாம் பருப்பு – 25

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

சர்க்கரை – 1/4 கிலோ

ஏலக்காய் தூள் – பாதாம் எஸ்சென்ஸ்

குங்குமப்பூ – ஒரு சிட்டிகை

பால் – 1 லிட்டர்

செய்முறை:

வெதுவெதுப்பான பாலில் குங்குமப் பூவை ஊறவைக்கவும்.
பாதாம் பருப்பை தண்ணீரில் ஊறவிட்டு தோலை உரித்து மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்.

பாலை நன்றாக காய்ச்சவும், பால் அரை பங்காக சுண்டியதும் சர்க்கரை சேர்க்கவும்.

பிறகு பாதாம் விழுதை போட்டு 5 நிமிடம் அடி பிடிக்காமல் கிளறவும்

பால் திக்காகும் போது ஏலக்காய் தூள், ஊறவைத்த குங்கும பூ சேர்த்து கிளறினால் பாதாம் கீர் ரெடி.

Leave A Reply

Your email address will not be published.